தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு


தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 3 March 2017 4:00 AM IST (Updated: 3 March 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு தூத்துக்குடி டி.எஸ்.எப் ஓட்டலில்    நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய தொழில் கூட்டமைப்பு மதுரை மண்டல துணை இயக்குனர் கணேசன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், கூட்டமைப்பு புதிய தலைவராக ஸ்டெர்லைட் நிறுவன துணைத்தலைவர் முருகேசுவரன்,  துணைத்தலைவராக நெல்லை பெல் நிறுவன அதிகாரி சஞ்சய் குணசிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் எட்வின் சாமுவேல் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story