நெல்லை மாவட்டத்தில் 38,271 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்–2 தேர்வை 38 ஆயிரத்து 271 மாணவ–மாணவிகள் எழுதினர்.
நெல்லை,
தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. மொத்தம் 106 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு ஒரு தேர்வு மையம் என மொத்தம் 107 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இந்த மையங்களில் 16 ஆயிரத்து 391 மாணவர்கள், 21 ஆயிரத்து 880 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 271 பேர் தேர்வு எழுதினார்கள். இதுதவிர 1,380 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 107 பேர் மாற்றுத்தினாளிகள் ஆவர். மேலும் பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகள் 12 பேர் பிளஸ்–2 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களில் 10 கைதிகள் சென்னையில் உள்ள சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார்கள்.
கண்காணிப்பு
மாணவ–மாணவிகள் தேர்வு எழுதும் பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் ஆய்வு செய்தார். அவர் பாளையங்கோட்டை இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உடன் சென்றார்.
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை கண்காணிக்க 107 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், 38 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 4 கூடுதல் துறை அலுவலர்கள், 2,046 அறை கண்காணிப்பாளர்கள், 232 நிலையான படை உறுப்பினர்கள் மற்றும் 24 வழித்தட அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தேர்வு பணிகளை கண்காணித்தனர். மாணவ–மாணவிகள் தேர்வில் ‘காப்பி’ அடிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தேர்வு கூடங்களில் சீரான மின்வினியோகம், குடிநீர் வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
மாணவிகள் பிரார்த்தனை
முன்னதாக மாணவ–மாணவிகள் தேர்வை நல்லமுறையில் எழுத வேண்டும் என்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். ஆங்காங்கே உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் மாணவர்கள் வழிபாடு நடத்தினார்கள். பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் முன்னிலையில் கூட்டாக பிரார்த்தனை செய்து, தேர்வு அறைகளுக்கு சென்றனர். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ–மாணவிகளை வாழ்த்தி அனுப்பினர்.

Next Story