ஈரான் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மீனவர்கள் உள்பட 35 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஈரான் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மீனவர்கள் உள்பட 35 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மீனவர்களின் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் முட்டம், ராஜாக்கமங்கலம்துறை, கேசவன்புத்தன்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 மீனவர்கள் சவுதி அரேபியா நாட்டில் இருந்து ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது ஈரான் கடல் எல்லையை தாண்டியதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7–ந் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான அபராதத் தொகையை கோர்ட்டில் செலுத்திய பிறகும் மீனவர்கள் 5 பேரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
இதேபோல் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேரும், நெல்லை மாவட்டம் கூட்டப்புளி, இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேரும் பக்ரைன் நாட்டில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற போது 22–9–2016 அன்று ஈரான் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு, இன்று வரை கடலிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஈரான் கோர்ட்டில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் செலுத்திய பிறகும் மீனவர்களை ஈரான் கடலோர காவல்படை விடுவிக்காமல் சிறை வைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் பக்ரைன் நாட்டில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற போது ஈரான் கடல் எல்லையை தாண்டியதாக ஈரானில் இக்கிஸ் என்ற தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இந்தநிலையில் குமரி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் நேற்று தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
ஈரான் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 35 மீனவர்களுக்கும் சரியாக உணவு வழங்கப்படவில்லை. உணவு, உடை, மருத்துவம், பாதுகாப்பு இல்லாமல் தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இறப்பதற்குள் எங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி சிறையில் உள்ள மீனவர்கள் அழுது புலம்புகிறார்கள். அங்கு தமிழக மீனவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு, ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரி, தமிழக முதல்–அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Next Story