பிளஸ்–2 பரீட்சை தொடங்கியது: தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் நடந்த மொழி பாடங்களுக்கான முதல்தாள் தேர்வை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்,
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 78 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
முதல் நாளான நேற்று தமிழ், மலையாளம், இந்தி, பிரெஞ்சு போன்ற மொழி பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது. முன்னதாக தேர்வு எழுத வந்த மாணவ–மாணவிகளை அவர்களது பெற்றோரும், ஆசிரிய–ஆசிரியைகளும் வாழ்த்துக்கூறியும், ஆசீர்வதித்தும் அனுப்பி வைத்தனர்.
25,687 மாணவர்கள் எழுதினர்
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடந்தது. இந்த தேர்வை குமரி மாவட்டம் முழுவதும் 25,687 மாணவ–மாணவிகள் எழுதினர். தேர்வு நடைபெற்ற ஒவ்வொரு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ்–2 பொது தேர்வை (தமிழ் முதல் தாள்) கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:–
17 பார்வையற்ற மாணவர்கள்
தமிழகத்தில் இன்று (நேற்று) முதல் வருகிற 31–ந் தேதி வரை பிளஸ்–2 பொது தேர்வுகள் நடைபெறுகின்றன. குமரி மாவட்டம் தக்கலை கல்வி மாவட்டத்தில் 88 பள்ளிகளும் (26 தேர்வு மையங்கள்), குழித்துறையில் 76 பள்ளிகளும் (28 தேர்வு மையங்கள்), நாகர்கோவிலில் 66 பள்ளிகளும் (24 தேர்வு மையங்கள்) என மொத்தம் 3 கல்வி மாவட்டத்தில் 230 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு 78 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் 11,783 மாணவர்களும், 13,904 மாணவிகள் என மொத்தம் 25,687 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்கள். மேலும் பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக, அவர்கள் சொல்வதை எழுதும் பணிக்காக 17 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 1 மாணவரும், தக்கலை கல்வி மாவட்டத்தில் 7 மாணவர்களும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் 9 மாணவர்களும் என மொத்தம் 17 பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
கண்காணிப்பு
தேர்வுகள் எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடைபெற காவல்துறை மூலம் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.
கலெக்டருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா (பொறுப்பு), அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு மற்றும் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இணை இயக்குனர்
குமரி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ்–2 தேர்வை கண்காணிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று தேர்வை கண்காணித்தார்.
இதேபோல் முதன்மைக்கல்வி அதிகாரி பாலாவும் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பல்வேறு தேர்வு மையங்களை ஆய்வு செய்தார்.

Next Story