மும்பை மேயர் தேர்தலையொட்டி பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்கிறார்
மும்பை மேயர் தேர்தலையொட்டி பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் நடக்கிறது.
மும்பை,
மும்பை மேயர் தேர்தலையொட்டி பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் நடக்கிறது. இதில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்கிறார்.
மேயர் தேர்தல்227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா 84 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. இதற்கு அடுத்தபடியாக பாரதீய ஜனதா 82 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில், மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 8–ந் தேதி நடைபெறுகிறது.
இதில், சிவசேனா– பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. இரு கட்சிகளும் தனித்து நின்று மேயர் பதவிக்கு குறிவைக்கின்றன. அத்துடன், தங்களுக்கு சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவு இருக்கிறது என்று சிவசேனா மார்தட்டி வருகிறது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்பரபரப்பான இந்த சூழலில், பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் நடைபெறுகிறது. இதில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே மற்றும் மும்பை நகர தலைவர் ஆசிஷ் ஷெலார் ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது, மேயர் தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகிறது.
மேயர் தேர்தலையொட்டி, வேட்பு மனு தாக்கல் நாளை (சனிக்கிழமை) முடிவடைகிறது.