தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ, பாதிப்போ ஏற்படாது


தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ, பாதிப்போ ஏற்படாது
x
தினத்தந்தி 4 March 2017 3:30 AM IST (Updated: 3 March 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ, பாதிப்போ ஏற்படாது என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சம்பத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 31 தலைமை ஆசிரியர்களும் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 31 தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு துணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் மருத்துவ அலுவலர்களால் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது.


தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி

கூட்டத்தில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சம்பத் பேசுகையில், 9 மாத குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரே சமயத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசியை போடும்போதுதான், போலியோவை போன்று தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியும். எனவே, இதுவரை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு கடந்த 1–ந் தேதி முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ, பாதிப்போ ஏற்படாது. மிகவும் பாதுகாப்பானது. எனவே இந்த தடுப்பூசி முகாம் முற்றிலுமாக வெற்றியடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது, என்றார்.


Next Story