நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மழை சூறைக்காற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் நாசம்
நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்தது. சூறைக்காற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாயின.
நெல்லை,

பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. நெல்லை டவுன் பகுதியில் மாலை 4 மணிக்கு மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணிநேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்தது.
நெல்லையை அடுத்த மேலச்செவல் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மேலச்செவலை அடுத்த தேசமாணிக்கம், நயினார்குளம், கீழச்செவல், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் காற்றில் சாய்ந்து சேதம் அடைந்தது. நெல்லை மாவட்டத்தில் பருவமழை பெய்யாமல் ஏற்கனவே வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் குலை தள்ளிய வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அணைகள்
பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 257.52 கன அடியாக உயர்ந்தது.
பாபநாசம் அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 100 கன அடியில் இருந்து 200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணையில் இருந்தும் தொடர்ந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் அணை -3, மணிமுத்தாறு -6, அம்பை -1, சேரன்மாதேவி -2, பாளையங்கோட்டை -1, நெல்லை -1.1.

Next Story