‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சட்டக்கல்லூரி மாணவர்கள்
இந்நிலையில் திருச்சி சட்டக்கல்லூரி மாணவ– மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர். அவர்கள் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும், தமிழகத்தின் எந்த பகுதியிலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்டி.வி.எஸ். டோல்கேட்டிற்கு வந்ததும் அவர்கள் மேம்பாலத்திற்கு அடியில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக கூறினார்கள். ஆனால் போலீசார் தர்ணா போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் சிறிது நேரம் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.