லாரிகளில் வினியோகிக்கும் தண்ணீர் வீணாக சிந்தினால் அபராதம் சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை
சென்னை குடிநீர் வாரியத்தினால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை குடிநீர் வாரியத்தின் நீரேற்று நிலையங்களில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு செல்லும் குடிநீர் லாரிகளில் இருந்து தண்ணீர் கசிந்து சாலையில் வீணாக கொட்டுகிறது. இதை தடுப்பதற்காக குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அருண்ராய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குடிநீர் முக்கியத்துவத்தின் இன்றைய சூழலில் எக்காரணம் கொண்டும் குடிநீர் சாலைகளில் வீணாகக்கூடாது எனவும், இனி வருங்காலங்களில் லாரிகளில் வினியோகம் செய்வதற்காக செல்லும்போது சாலைகளில் கசிவு ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் பகுதி பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள 15 குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் உள்ள பொறியாளர்கள், நீரேற்று மையங்களின் கீழ் உள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களை அழைத்து, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி தண்ணீர் சிந்தாமல் இருப்பதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story