விவசாய நிலத்தை பாலைவனமாக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது

விவசாயத்தை பாலைவனமாக்கும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என டி.ராஜேந்தர் கூறினார்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 20-வது நாளாக தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக லட்சிய தி.மு.க. தலைவரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தார்.
பின்னர் அவர் கார் மூலம் நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை கிராமத்திற்கு வந்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய் கிணற்றை பார்வையிட்டு, இத்திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
டி.ராஜேந்தர் பேச்சு
தொடர்ந்து நெடுவாசல் கிராமத்திற்கு வந்து, அங்கு நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் விவசாய நிலத்தை பாலைவனமாக்கும் திட்டம். இந்த திட்டம் தமிழகத்தில் எங்கேயும் செயல்படுத்தக்கூடாது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசல் மக்களை அந்நிய சக்திகள் தூண்டி விடுவதாக சொல்லி வருகிறார். அது தவறானது.
ஏன் என்றால் தங்கள் நிலத்தை காக்க அவர்களாக தான் போராடுகிறார்கள். விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்த கூடாது. இந்த திட்டம் தமிழகத்தில் இருந்து வெளியே போகும் வரை போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டி.ராஜேந்தர் திருச்சி விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “இயற்கை எரிவாயு எடுக்கும் திட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தூங்குகின்றன. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றோம்” என்றார்.

Next Story