ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 8 March 2017 8:00 PM GMT (Updated: 2017-03-08T21:39:54+05:30)

ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று நெல்லையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

நெல்லை,

ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று நெல்லையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

பேட்டி

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மகாலில் நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

விழா முடிந்து புறப்படும்போது, முதல்–அமைச்சர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

படிப்படியாக நிறைவேற்றப்படும்

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அவர் ஏழை, எளிய மக்கள் பயன்பெற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். புதிய திட்டங்கள் தொடங்குவதற்காக 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கி கட்டி முடிக்கப்பட்ட பல திட்டப்பணிகள் இந்த விழாவில் திறந்து வைக்கப்பட்டு உள்ளன. பல திட்டங்கள் தொடங்கப்பட்டு விட்டன. சில திட்டங்கள் ஆய்வில் உள்ளன. அந்த திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும். இந்த ஆட்சி குறுகிய காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story