நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக சின்னாளப்பட்டி பொதுமக்கள் போராட்டம்


நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக சின்னாளப்பட்டி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2017 9:45 PM GMT (Updated: 2017-03-09T01:48:16+05:30)

நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையில் கம்பட்டி பிரிவு அருகே சாலையோரத்தில் நின்று நேற்று போராட்டம் நடத்தினர்.

சின்னாளபட்டி,

நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையில் கம்பட்டி பிரிவு அருகே சாலையோரத்தில் நின்று நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நெடுஞ்சாலையோரத்தில் நின்று அவர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில் விவசாய பின்னணியை கொண்ட நாங்கள் நெடுவாசலுக்கு சென்று போராடமுடியாத நிலை உள்ளது. எனவே எங்களின் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்தனர்.


Next Story