தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க பழுதடைந்த அடிபம்புகளை சீரமைக்கும் பணி தீவிரம்


தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க பழுதடைந்த அடிபம்புகளை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 March 2017 10:30 PM GMT (Updated: 8 March 2017 8:32 PM GMT)

கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியத்தின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய மற்றும்

பெரம்பூர்,

 பழுதடைந்த அடிபம்புகளை சீரமைத்தும், புதிதாக போர் அமைத்து அடிபம்புகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக சென்னை குடிநீர் வாரிய 6-வது மண்டல பகுதி பொறியாளர் சுரேஷ்குமார், துணை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் சென்னை மாநகராட்சி 70-வது வார்டு உதவி பொறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் 70-வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூரில் உள்ள வடிவேல் தெரு, பாரதி தெரு, மதூர தெரு மற்றும் துரைசாமி தெருக்களில் உள்ள 7 பழுதடைந்த அடிபம்புகளை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்தனர்.

இதே போல் குமாரசாமி தெருவில் புதிதாக போர் அமைத்து அடிபம்பு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த பணிகள் தொடரும் என மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story