பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்ய முயற்சி பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது


பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்ய முயற்சி பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2017 9:09 PM GMT (Updated: 2017-03-09T02:38:52+05:30)

திருவாரூர் அருகே நகைக்கு பாலிஷ் போட்டுத் தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்ய முயன்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கூடூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி திவ்யா (வயது 23). நேற்று முன்தினம் இவர் வீட்டுக்கு வந்த 2 வாலிபர்கள் நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி திவ்யா நகைகளை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் நகைக்கு பாலிஷ் போடாமல் ஆசிட்டில் போட்டு தங்கத்தை கரைக்க முயன்றனர். தன்னை ஏமாற்றி தங்கத்தை திருடுவதை அறிந்த திவ்யா, 2 பேரையும் பிடித்து திருவாரூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.

பீகார் வாலிபர்கள் கைது

வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலம் ரகுநாத்பூரை சேர்ந்த நரேஷ்பிரயாதவ் மகன் பப்புகுமார் யாதவ் (24), அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் யாதவ் மகன் அகிலேஷ் குமார் (23) என்பதும், நகைகளை ஆசிட்டில் கரைத்து தங்கத்தை நூதன முறையில் திருட முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்்பதிவு செய்து பப்பு குமார் யாதவ், அகிலேஷ் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

Next Story