மீன்சுருட்டி அருகே சீமைக்கருவேல மரங்களை அகற்றிய பொதுமக்கள்


மீன்சுருட்டி அருகே சீமைக்கருவேல மரங்களை அகற்றிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:10 PM GMT)

மீன்சுருட்டி அருகே சீமைக்கருவேல மரங்களை அகற்றிய பொதுமக்கள் தாசில்தார் பாராட்டு

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்ற தலைவர் தங்கதமிழ், செயலாளர் சிவா ஆகியோர் தலைமையில் இளைஞர்கள், பொதுமக்கள் சுமார் 60 பேர் தனித்தனி குழுக்களாக அந்த பகுதியில் உள்ள சுடுகாடு, சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை பார்வையிட்டு அந்த பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பொதுமக்களை வெகுவாக பாராட்டினார்.

பின்னர் அவர் கூறுகையில், இதுபோன்று இளைஞர்கள், பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தங்களது பகுதியில் பொதுஇடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும். கோடை காலத்துக்கு முன்பே சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.


Next Story