மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம் தமிழ் முதல்தாள் தேர்வை 23,864 மாணவ, மாணவிகள் எழுதினர்


மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம் தமிழ் முதல்தாள் தேர்வை 23,864 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2017 9:36 PM GMT (Updated: 2017-03-09T03:05:17+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இதில் தமிழ் முதல்தாள் தேர்வை 23 ஆயிரத்து 864 பேர் எழுதினர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இதில் தமிழ் முதல்தாள் தேர்வை 23 ஆயிரத்து 864 பேர் எழுதினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 309 பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 584 மாணவர்கள், 11 ஆயிரத்து 119 மாணவிகள் என 23 ஆயிரத்து 703 மாணவ, மாணவிகளும், 521 தனித்தேர்வர்களும் என மொத்தம் 24 ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுத இருந்தனர்.

இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 83 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. முதல்நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுத 23 ஆயிரத்து 703 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். இவர்களில் 23 ஆயிரத்து 428 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 275 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

314 பேர் தேர்வு எழுதவில்லை

தனித்தேர்வர்களை பொறுத்தவரையில் தமிழ் முதல் தாள் தேர்வை 475 பேர் எழுத இருந்தனர். இவர்களில் 436 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 39 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தமாக தமிழ் முதல்தாள் தேர்வை 23 ஆயிரத்து 864 பேர் எழுதினர். இதேபோல் 275 மாணவ, மாணவிகள், 39 தனித்தேர்வர்கள் என 314 பேர் எழுதவில்லை.

இந்த தேர்வு பணியில் மாவட்டம் முழுவதும் 83 முதன்மை கண்காணிப்பாளர்கள், 21 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 83 துறை அலுவலர்கள், 21 கூடுதல் துறை அலுவலர்கள், 1,840 அறை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் என மொத்தம் 2,475 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இது தவிர 200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் வடக்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், முதன்மை கல்வி அதிகாரி கோபிதாஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கலெக்டர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


Next Story