தானேயில் நாளை பல இடங்களில் குடிநீர் வெட்டு மாநகராட்சி அறிவிப்பு


தானேயில் நாளை பல இடங்களில் குடிநீர் வெட்டு மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 March 2017 9:54 PM GMT (Updated: 8 March 2017 9:53 PM GMT)

தானேயில் நாளை(வெள்ளிக்கிழமை) குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நடக்கிறது.

தானே,

தானேயில் நாளை(வெள்ளிக்கிழமை) குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக தானே கோட்பந்தர்ரோடு, காந்திநகர், வசந்த்விஹார், உண்ணத்திகார்டன், சுர்கர்பாடா, பாத்ளிபாடா, பவார்நகர், கோடாரிகாம்பவுண்ட், ஆஜாத்நகர், டோங்கரிபாடா, வாக்பில் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் குடிநீர் சப்ளை செய்யப்படமாட்டாது.

இதேபோல சம்தாநகர், திருத்தூபார்க், சித்தேஷ்வர், தானே சிறை, சாங்கேத், உத்லசர், ரேத்திபந்தர், மும்ரா கோலிவாடா, சைலேஷ்நகர், சஞ்சய்நகர், கல்வா ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையும் 24 மணி நேரத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது. எனவே பொதுமக்கள் தேவையான தண்ணீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இந்த தகவலை தானே மாநகராட்சி தெரிவித்து உள்ளது.


Next Story