சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஏத்தாப்பூர் கிளையில் புதிய கணக்கு தொடங்க விண்ணப்பம் வினியோகம்


சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஏத்தாப்பூர் கிளையில் புதிய கணக்கு தொடங்க விண்ணப்பம் வினியோகம்
x
தினத்தந்தி 8 March 2017 10:03 PM GMT (Updated: 2017-03-09T03:32:40+05:30)

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஏத்தாப்பூர் கிளையை புதிதாக தொடங்கி வைத்தார்.

சேலம்,

இதையொட்டி கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.காமராஜ் முன்னிலையில் வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், வாடிக்கையாளர்களுக்கு புதிதாக கணக்கு தொடங்க விண்ணப்ப படிவம் கொடுத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஆர்.ரமேஷ், வங்கி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story