ஏக்நாத் கட்சே மீதான நில அபகரிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்படும்


ஏக்நாத் கட்சே மீதான நில அபகரிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்படும்
x
தினத்தந்தி 8 March 2017 10:11 PM GMT (Updated: 8 March 2017 10:10 PM GMT)

புனே போசரி பகுதியில் ரூ.40 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய மனைவியின் பெயருக்கு முறைகேடாக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மும்பை,

புனே போசரி பகுதியில் ரூ.40 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய மனைவியின் பெயருக்கு முறைகேடாக மாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே வருவாய்த்துறை மந்திரி பதவியை இழந்தார்.

இந்த நில அபகரிப்பு புகாரை விசாரித்து வரும் உள்ளூர் போலீசார், வழக்கை திறமையாக கையாளவில்லை என்று மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.வி.மோரே மற்றும் ரேவதி மொகிதே தியரே முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நிதீன் பிரதான், ‘‘இந்த வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்படும்’’ என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணை துரிதமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 3–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story