கோட்டைமேட்டில் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா


கோட்டைமேட்டில் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 10 March 2017 1:26 PM GMT)

கமுதி அருகே உள்ள கோட்டை மேட்டில் புதிதாக கட்டப்பட்ட அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கமுதி,

கமுதி அருகே உள்ள கோட்டை மேட்டில் புதிதாக கட்டப்பட்ட அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புதிய மூர்த்திகளுக்கு கண் திறத்தல், தங்கம் வெள்ளி பீடத்தில் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிவடைந்து புனிதநீர் குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோவிலை வலம்வந்தது. பின்னர் காலை 11 மணிக்கு விமான கோபுரம், மூலஸ்தான அய்யப்பன், கோவில் கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் கோட்டை மேடு அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற கால்துறை அதிகாரி குருநாதர் கந்த கிருஷ்ணன், சர்குருநாதர், லெட்சுமணன், ராமமூர்த்தி மற்றும் கோட்டை மேடு அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story