பர்கூர் பேரூராட்சியில் முறையற்ற 23 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை


பர்கூர் பேரூராட்சியில் முறையற்ற 23 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-11T19:16:18+05:30)

பர்கூர் பேரூராட்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவுப்படி

பர்கூர்,

பர்கூர் பேரூராட்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவுப்படி முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில், தலைமை எழுத்தர் லட்சுமிகாந்தன், மின் பணியாளர் மாதேஸ், சுகாதார மேற்பார்வையாளர் ரத்தினவேல் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது 9–வது வார்டு தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 23 முறையற்ற குடிநீர் இணைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இணைப்புகளை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story