அரசு ஊழியர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2017 4:15 AM IST (Updated: 16 March 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிடவேண்டும், 1-1-2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும், சிறப்பு கால முறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஒப்பந்த முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து விட்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட செயலாளர் கென்னடி ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்கனவே வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினரும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story