மாற்றுப்பணி வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மூடப்பட்ட கடைகளையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை சாந்தி-கமலா தியேட்டர் அருகே நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரைய்யன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எட்வின்ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் கலந்து கொண்டு பேசினார்.
மாற்றுப்பணி வழங்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் மூடப்பட்ட கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். தொடர்பணி வழங்குவதில் வெளிப்படையான, பாரபட்சமற்ற நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் பென்சன் வழங்க வேண்டும். பணிவரன்முறை, காலமுறை ஊதியம், தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
கடைகளுக்கு அளவுக்கு அதிகமான சரக்குகளை திணிக்கக்கூடாது. பணி மூப்பு பட்டியலை இட ஒதுக்கீடு அடிப்படையில் உருவாக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். மரணம் அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தை அமலாக்க வேண்டும்.
இடமாற்றம்
தொழிலாளர்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமலாக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இடமாற்றும் கோருபவர்களுக்கு இடமாற்றம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் பேர்நீதிஆழ்வார், அன்பு, டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள், சி.ஐ.டி.யூ. சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story