கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்
நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
வளர் இளம் பெண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாகர்கோவில் மகப்பேறு மகளிர் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 400–க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கு
பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி சென்று நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனைவி அஞ்சனா தர்மராஜன், மகளிர் கிறிஸ்துவ கல்லூரி முதல்வர் நிர்மலா மனுவேல், அகில இந்திய மகப்பேறு மகளிர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெஸிதன் தர்மா (மும்பை), நாகர்கோவில் மகப்பேறு மகளிர் சங்கத்தின் தலைவர் டாக்டர் மேரி ஆன், டாக்டர்கள் சுமித்ரா, சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ரத்த சோகை, சினைப் பைகளில் நீர் கட்டிகள் உருவாகுவதை தவிர்ப்பது, உடல் பருமன், மாதவிடாய் பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள் போன்றவற்றை எவ்வாறு கையாள்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Next Story