சென்னை துறைமுகத்துடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம் மத்திய மந்திரிகள் முன்னிலையில் கையெழுத்தானது
சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய சென்னை துறைமுகத்துடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம் மத்திய மந்திரிகள் முன்னிலையில் கையெழுத்தானது
புதுச்சேரி
சென்னை துறைமுகத்துக்கு அதிக அளவில் கப்பல்கள் வருவதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டு சரக்குகளை பிரித்து அனுப்புவதில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
அதை தவிர்க்க ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பெரிய கப்பல்களில் கொண்டு வரப்படும் சரக்குகளை புதுவை கடல் பகுதிக்கு கொண்டு வந்து சரக்குகளை இறக்கி இங்கு இருந்து தென் பகுதிக்கு பிரித்து அனுப்புவது என்று திட்டமிடப்பட்டது.
துறைமுக ஒப்பந்தம்
இதுதொடர்பாக மத்திய அரசின் உதவியுடன் புதுவை அரசும், சென்னை துறைமுக கழகமும் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து சரக்கு கப்பல்களை புதுவை துறைமுகத்திற்கு கொண்டு வந்து கையாளுவது தொடர்பாக சென்னை துறைமுகத்துடன் புதுவை அரசு ஒப்பந்தம் செய்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான ஒப்பந்தம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. டெல்லியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவது தொடர்பாக தேதிகள் முடிவு செய்யப்பட்டு தள்ளிப்போனது.
கையெழுத்தானது
இந்தநிலையில் சென்னை துறைமுகம்- புதுவை அரசு இடையே இந்த ஒப்பந்தம் டெல்லியில் உள்ள போக்குவரத்து பவனில் நேற்று கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் துறைமுகத் துறை மந்திரி நிதின்கட்காரி, இணை மந்திரி மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா மற்றும் சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 லட்சம் டன்
சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளை புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கையாளுவதற்கு சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி அரசுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் உள்ள போக்குவரத்து பவனில் கையெழுத்தானது. இதன் மூலம் புதுச்சேரி துறைமுகத்தில் முதலாம் ஆண்டில் 4 லட்சம் டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்படும்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்பட உள்ளது. அரசு எடுத்துக் கொண்ட தீவிர நடவடிக்கையை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதன் மூலம் புதுச்சேரியில் வேலைவாய்ப்பும், தொழில்வளமும் அதிகரிக்கும்.
சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளை புதுச்சேரியில் ஏற்றி, இறக்கி கையாளுவதன் மூலம் கிடைக்கும் வருவாயை சென்னை துறைமுகமும், புதுச்சேரி அரசும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சரக்குகளை எளிதாக கையாளும் வகையில் புதுச்சேரி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகளை சென்னை துறைமுகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக சென்னை துறைமுகம் உறுதி அளித்துள்ளது.
ரூ.50 கோடி நிதியுதவி
அதேபோல் ரெயில் மற்றும் சாலைப்போக்குவரத்து மூலமாக சரக்குகளை நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல வசதியாக புதுச்சேரியில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய நிதியுதவியை வழங்கவேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதற்கும் சென்னை துறைமுகம் ஒப்புதல் அளித்ததுடன் சாகர் மாலா திட்டத்தின்கீழ் ரூ.50 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
சென்னை முதல் விசாகப்பட்டினம் வரையிலான தரைவழி போக்குவரத்தை தொழிற்பாதையாக மாற்ற உள்ளதால் இதில் புதுச்சேரியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய மந்திரியிடம் முதல்-அமைச்சர் முன்வைத்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மணல்வாரும் பணி
துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ரூ.3 கோடி செலவில் புதுவை துறைமுக முகத்துவார பகுதியை ஆழப்படுத்தும் பணி தனியார் மணல்வாரி கப்பல் மூலம் தொடங்க உள்ளது. இதற்காக காரைக்காலில் இருந்து தனியார் மணல் வாரி கப்பல் புதுவை கடற்பகுதிக்கு வந்துள்ளது. இந்த கப்பல் மூலம் துறைமுக முகத்துவாரத்தில் மணல்வாரும் பணி ஓரிரு நாளில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story