வாணாபுரம் ஏரியில் கொட்டப்படும் ஆலை கழிவுகள்: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமககள் அவதி


வாணாபுரம் ஏரியில் கொட்டப்படும் ஆலை கழிவுகள்: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமககள் அவதி
x
தினத்தந்தி 17 March 2017 2:15 AM IST (Updated: 16 March 2017 7:28 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் ஏரியில் மீன்கள் வளர்கக ஆலை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் நிறம் மாறி மாசுபடுகிறது.

வாணாபுரம்

வாணாபுரம் ஏரியில் மீன்கள் வளர்கக ஆலை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் நிறம் மாறி மாசுபடுகிறது. குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமககள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாணாபுரம் ஏரி

தண்டராம்பட்டு தாலுகா வாணாபுரத்தில் பொதுப்பணித்துறைககு சொந்தமான வாணாபுரம் ஏரி உள்ளது. சுமார் 100 ஏககர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் மழை காலங்களில் தேககி வைககப்படும் தண்ணீரை வறட்சி காலங்களில் விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாணாபுரத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஏரியில் உள்ள கிணறு விளங்கி வருகிறது.

கடந்த மாதம் 12–ந் தேதி சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறாக திறந்து விடப்பட்ட தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 40 ஏரிகளுககு சென்றது. அதில் ஒரு சில ஏரிகள் மட்டுமே அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் மீதமுள்ள ஏரிகளுககு தண்ணீரும் முழுமையாக சென்றடையவில்லை. சாத்தனூர் அணை தண்ணீரால் வாணாபுரம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக விவசாயிகள் தற்போது தங்கள் நிலங்களை உழுது பயிரிட்டு வருகின்றனர்.

ஆலை கழிவுகள்

ஏரியில் தண்ணீர் நிரம்பியதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் வாணாபுரம் ஏரியில் மீன் வளர்கக ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. ஏரியில் மீன் வளர்க்க ஏலம் எடுத்தவர்கள் கடந்த சில நாட்களாக ஏரியில் மீன் குஞ்சுகள் விட்டு வந்தனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக மீன்களுககு உணவாக ஆலை கழிவுகள் ஏரியின் உள்பகுதியில் கொட்டப்பட்டது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீரின் நிறம் மாறுவது மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

குடிநீரில் கழிவுநீர்

வாணாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமககளுககு ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வாணாபுரம் ஏரியில் உள்ள கிணற்றின் தண்ணீர் குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஏரி நீரில் ஆலை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏரியில் உள்ள கிணற்று குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆலை கழிவுகளை ஏரியில் கொட்டுவதால் தற்போது கால்நடைகள் கூட ஏரி தண்ணீரை குடிப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே பொதுமககள் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஆலை கழிவுகளை ஏரியில் கொட்டப்படுவதை தடுகக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணாபுரம் பொதுமககள் மற்றும் விவசாயிகள் கோரிககை விடுத்துள்ளனர்.


Next Story