புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு


புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2017 1:45 AM IST (Updated: 16 March 2017 7:28 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டையில் உள்ள அரசு சுகாதார நிலைய மருத்துவமனையை சுகாதாரத்துறை இணை இயக்குனர் கலிவரதன் ஆய்வு செய்தார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த புதுப்பேட்டையில் உள்ள அரசு சுகாதார நிலைய மருத்துவமனையை சுகாதாரத்துறை இணை இயக்குனர் கலிவரதன் ஆய்வு செய்தார்.

மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் மையம் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாமில் மேற்கொண்ட விதங்களை பற்றியும், நோயாளிகளை கவனிக்கும் விதம் பற்றியும் நேரடியாக நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதி, டாக்டர்கள் மனோன்மணி, மேனகா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story