போளூர் உட்கோட்டத்தில், கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் வசூல்


போளூர் உட்கோட்டத்தில், கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் வசூல்
x
தினத்தந்தி 17 March 2017 2:15 AM IST (Updated: 16 March 2017 7:48 PM IST)
t-max-icont-min-icon

போளூர் உட்கோட்டத்தில் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 50 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

போளூர்

போளூர் உட்கோட்டத்தில் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 50 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரிலும், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் அறிவுரையின் பேரிலும் போளூர், சேத்துப்பட்டு, கடலாடி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கடந்த மாதம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 742 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் வசூல்

சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிய 213 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய 241 பேர் மீதும், இருசக்கர வாகனங்களில் 2–க்கு மேற்பட்டோர் சென்ற 13 வாகனங்கள் மீதும், ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) இல்லாமல் வாகனம் ஓட்டிய 46 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 45 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றி சென்ற 12 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிக வேகமாக சென்ற வாகனங்கள், அதிக உயரம் ஏற்றி சென்ற வாகனங்கள், நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தியவர்கள் என போளூர் உட்கோட்டத்தில் கடந்த மாதம் மொத்தம் 742 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 50 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


Next Story