வேன்– மோட்டார் சைக்கிள் மோதல்: விவசாயி பலி; மனைவி படுகாயம்
ஸ்ரீ வைகுண்டம் அருகே வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பரிதாபமாக பலியானார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீ வைகுண்டம் அருகே வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பரிதாபமாக பலியானார். அவருடைய மனைவி பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாயிசெய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வசவப்பபுரத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில், தங்களது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
வேன் மோதியதுநாட்டார்குளம் அருகில் சென்றபோது, எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் 2பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த மாயாண்டி, பேச்சியம்மாள் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாயாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். பேச்சியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான விட்டிலாபுரத்தை சேர்ந்த பேச்சி மகன் கணேசனை (31) கைது செய்தனர்.