தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு, பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு மனிதசங்கிலி
தூத்துக்குடியில் டெங்கு, பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் டெங்கு, பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் ஊர்வலம் நடந்தது.
மனித சங்கிலிதூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், தட்டம்மை நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. மாநகர நல அலுவலர் பிரதீப் வி.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். அரசு ஆஸ்பத்திரி டீன் சாந்தகுமார் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள், செவிலியர் பயிற்சி பள்ளிக்கூட மாணவிகள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் ராஜாஜி பூங்கா முன்பு மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்இதை தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் வி.வி.டி. சிக்னல், சிதம்பரநகர், எஸ்.எம்.புரம், திருச்செந்தூர் சாலை வழியாக அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் சென்ற மாணவ– மாணவிகள் கொசுப்புழு ஒழிப்பு, சுகாதாரத்தை பேணுதல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர்.
நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர்கள் ஜெயபாண்டியன், இன்சுவை, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அரிகணேசன், ஸ்டான்லி பாக்கியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.