கோவில்பட்டியில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
கோவில்பட்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்த போராட்டம்தபால் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 7–வது ஊதியக்குழு முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். ஓய்வூதியம் குறித்த கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும். 2004–ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசு பணிகளில் தனியார் மயத்தை அனுமதிக்க கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தபால் ஊழியர் சங்கங்களின் சார்பில், நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்அதன்படி கோவில்பட்டி கோட்டத்தில் பணியாற்றும் 935 தபால் ஊழியர்களில் 563 பேர் பணிக்கு செல்லவில்லை. 372 பேர் மட்டும் பணிக்கு சென்றனர். கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால், தபால் நிலையம் மூடிக் கிடந்தது. கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை தபால் நிலையங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தபால் ஊழியர் சங்க கோட்ட உதவி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர்கள் சுப்புராஜ், வீரணன், கோட்ட செயலாளர் தங்கராஜ், குருசாமி, குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.