ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டம்

திருப்பூர்,

வேலை நிறுத்த போராட்டம்

ஊரக வளர்த்துறையின் ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களின் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சாலை ஆய்வாளர்களுக்கு பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 14–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஊராட்சி செயலர்கள், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 500–க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்றும் கலெக்டர் அலுவலக வாசலில் கூடிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார்


Next Story