பல்லாவரத்தில் நள்ளிரவில் லாரி தீப்பிடித்து எரிந்து தானாக ஓடியதால் பரபரப்பு


பல்லாவரத்தில் நள்ளிரவில் லாரி தீப்பிடித்து எரிந்து தானாக ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2017 2:30 AM IST (Updated: 17 March 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரத்தில், கழிவு நீர் லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், குன்றத்தூர் சாலை சந்திப்பு அருகே சுடுகாடு சுற்றுச்சுவர் ஓரம் ஜி.எஸ்.டி. சாலையோரம் நிறுத்தி வைத்து இருந்த கழிவு நீர் லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ எரிந்த நிலையில் அந்த லாரி சாலையில் தானாக ஓடியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் லாரியை நிறுத்த முயன்றனர். இரும்பு தடுப்பு, கல் வைத்தும் லாரி தொடர்ந்து ஓடியது. பின்னர் லாரி சக்கரத்துக்கு அடியில் பெரிய கல் வைத்ததால் லாரி நின்றது.

அதற்குள் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், கழிவுநீர் லாரியில் எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. கழிவுநீர் லாரியில் தீப்பிடித்தது எப்படி? என பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story