ராமசாமி கோவிலில் ராமநவமி விழா பந்தக்கால் முகூர்த்தம்


ராமசாமி கோவிலில் ராமநவமி விழா பந்தக்கால் முகூர்த்தம்
x
தினத்தந்தி 17 March 2017 4:00 AM IST (Updated: 17 March 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

ராமசாமி கோவிலில் ராமநவமி விழா பந்தக்கால் முகூர்த்தம்

கும்பகோணம்,

கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோவில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டது. இங்கு பட்டாபிஷேக திருக்கோலத்தில் ராமர் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையொட்டி சாமி சன்னதிகளில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கோவில் செயல் அலுவலர் கலைவாணி, தக்கார் கவியரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமநவமி விழா கொடியேற்றம் வருகிற 28-ந் தேதியும், கருட சேவை வருகிற 31-ந் தேதியும், தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதியும் நடக்கிறது. 

Next Story