திருச்சி மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
திருச்சி,
பென்சன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு தவணை முறையில் பென்சன் வழங்குவதை கைவிட வேண்டும். மாதந்தோறும் முதல் தேதியிலேயே பென்சன் வழங்குவதை உத்திரவாதப்படுத்த வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நிறுத்தப்பட்ட ஓய்வுகால சேமநலநிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 9 மையங்களில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
ஓய்வூதியர்கள் போராட்டம்
திருச்சியில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மண்டலங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம், இணை செயலாளர் பவுல்ராஜ், மாவட்ட தலைவர் சின்னசாமி, இணை செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காத்திருப்பு போராட்டம் நேற்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமும் எழுப்பினார்கள். இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம். இங்கேயே விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம்” என்றனர். ஓய்வூதியர்களின் காத்திருப்பு போராட்டத்தையொட்டி மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story