உயிரிழப்பை தடுக்க பாதுகாப்பு உபகரணங்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும்
மின்வாரிய ஊழியர்கள் உயிரிழப்பை தடுக்க பாதுகாப்பு உபகரணங்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும் என்று விருது வழங்கும் விழாவில் மண்டல தலைமை பொறியாளர் வளர்மதி பேசினார்.
திருச்சி,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தின் திருச்சி மண்டல தொழில் நுட்ப பயிற்சி - மேம்பாட்டு மையத்தின் சார்பில் விருது வழங்கும் விழா திருச்சியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் மின் மாற்றி பழுது ஏதுமின்றி மற்றும் மின் மாற்றி பழுது குறைத்து சிறப்பாக பணியாற்றிய பிரிவு அதிகாரிகள், பணியாளர்களின் சிறப்பான சேவையை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய திருச்சி தென்னூர், தில்லைநகர், கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பிரிவு அலுவலகங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
அப்போது வளர்மதி பேசியதாவது:-
பாதுகாப்பு உபகரணங்கள்
சென்னையில் வார்தா புயல் தாக்கியபோது திருச்சி மண்டலத்தில் இருந்து சென்று பணியாற்றிய அதிகாரிகளையும், ஊழியர்களையும் பாராட்டுகிறேன். காற்று, மழை போன்ற காலங்களிலும் எந்தவித தயக்கமும் இன்றி மின்வாரிய பணியாளர்கள் களப்பணியாற்றும்அதே நேரத்தில் மின்வாரிய ஊழியர்கள் தங்களது குடும்பத்தையும் நினைத்து பார்க்கவேண்டும்.
ஆபத்தான பணிகளின் போது அவர்கள் பயன்படுத்துவதற்கு என பாதுகாப்பு உபகரணங்கள் மின்வாரியம் சார்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. அதனை அவர்கள் முழு அளவில் பயன்படுத்திக்கொண்டு 100 சதவீதம் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். மின் நுகர்வோர்கள் தான் நமக்கு எஜமானர்கள் போன்றவர்கள். எனவே அவர்கள் தொலைபேசியில் செய்யும் புகார்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேற்பார்வை பொறியாளர்கள் விருதாசலம் (திருச்சி பெருநகர்), பாலசுப்பிரமணியன் (கரூர்), கண்ணன் (பெரம்பலூர் பொறுப்பு) ஆகியோரும் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். தொடக்கத்தில் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முதுநிலை மேலாளர் ஜெயா ஜோசபின் வரவேற்று பேசினார். முடிவில் உதவி பொறியாளர் காயத்ரி நன்றி கூறினார்.

Next Story