விபத்தில் கொத்தனார் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் கொத்தனார் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் பெரம்பலூரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பெரம்பலூர், -
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா இளையபெருமாள்நல்லூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கொடியரசன் (வயது 27). கொத்தனார். கடந்த 27-11-2013 அன்று கொடியரசன் தனது நண்பர் சுரேசுடன் மோட்டார் சைக்கிளில் சின்னவளையம் அருகே புதுசாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கொடியரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் சுரேஷ் காயத்துடன் உயிர் தப்பினார்.
இதையடுத்து அரசு போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கேட்டு கொடியரசனின் பெற்றோர் ராமச்சந்திரன், லட்சுமி ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 25-2-2014 அன்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த கொடியரசனின் குடும்பத்துக்கு கும்பகோணம் கோட்ட திருச்சி அரசு போக்குவரத்து கழகம் ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 23-11-2015 அன்று தீர்ப்பு கூறினார்.
அரசு பஸ் ஜப்தி
எனினும் இழப்பீடு தொகையை வழங்காமல் அரசு போக்குவரத்து கழகம் இழுத்தடித்து வந்ததால் நிறைவேற்று மனுவை லட்சுமி தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமாபானு, கொடியரசன் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதால் பெரம்பலூருக்கு வரும் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும், மேலும் வட்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சத்து 353-ஐ அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு அமீனாக்கள் நேற்று ஜப்தி செய்தனர். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி மாற்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனால் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

Next Story