அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள்
ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் நடந்த சூற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங் கேற்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம், வினாடி-வினா, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தொடங்கி வைத்தார். மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
போட்டிகளின் நடுவர்களாக ஆசிரியர்கள் பாண்டியன், சகஜாநந்தா, விஜயராணி, அமுதா, பூவழகி, இளஞ் செழியன், பரணிதரன், அறிவழகன் ஆகியோர் செயல் பட்டனர்.
600 மாணவ-மாணவிகள்
‘இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ‘பல்லுயிர் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, பொது அறிவு சம்பந்தமான வினாக்களுக்கு பதில் சொல்லும் வகையில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பரிசுகள் பின்னர் வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சந்தானகிருஷ்ணன் செய்திருந்தார்.

Next Story