உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம்


உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில் தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

குத்தாலம்,

வறட்சியால் நெற்பயிர்கள் கருகியதை கண்டு தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு விளை நிலங்களுக்கான சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை மஞ்சள் வாய்க்கால் பகுதியில் தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் வக்கீல் குபேந்திரன் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் சுபாநந்தினி, தாசில்தார் காந்திமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் இரணியன், சுப்புமகேஷ் மற்றும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story