பொன்னேரியில் சார் பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பொன்னேரியில் சார் பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 2:40 AM IST (Updated: 17 March 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

அரசு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை லஞ்சம் பெற்றுக்கொண்டு சார்பதிவாளர் பதிவு செய்கிறார் என்று சார் பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

பொன்னேரி,

பொன்னேரி தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு துறையின் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு நேற்று இந்திய தேசிய பில்டர்ஸ் அன்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தரகர்கள் மற்றும் பொதுமக்கள் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய சென்றால் சார்பதிவாளர் தாமோதரன் நில மதிப்பில் 30 சதவீதத்தை லஞ்சமாக கேட்கிறார். லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் பத்திரப்பதிவு செய்ய தாமதம் செய்கிறார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மீறி அரசு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை லஞ்சம் பெற்றுக்கொண்டு பதிவு செய்கிறார் என்று கூறி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பில்டர்ஸ் அமைப்பை சேர்ந்த குமார், நிலத்தரகர்கள் சங்கத்தை சார்ந்த பத்மநாபன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். இதில் மெதூர்கோபி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சுரேஷ்குமார் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story