சம்பளம் வழங்கக்கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி,
பாப்ஸ்கோ பல்நோக்கு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் நிலுவையில் இருந்து வருகிறது. இதை உடனே வழங்கக்கோரி அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்காக கடந்த 8–ந்தேதி மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன்பின் தர்ணா, கஞ்சி காய்ச்சும் போராட்டம் என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
இதேபோல் பாண்டெக்ஸ் ஊழியர்களும் சம்பளம் வழங்கக்கோரியும், மேலாண் இயக்குனரை மாற்றக்கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக தட்டாஞ்சாவடியில் உள்ள இந்த நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களில் பரபரப்பு காணப்பட்டது.

Next Story