நாகர்கோவிலில் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில்,
குறைபாடு உடைய ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்தும் முறையை உடனே நிறுத்த வேண்டும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் திருத்தும் முறை மைய மதிப்பீட்டு முறையில் நடைபெற வேண்டும், தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றம் அறிவித்த தேர்வுத்தாள் திருத்தும் ஊதியத்தை பல்கலைக்கழகம் அமல்படுத்த வேண்டும், பல்கலைக்கழக ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான புகார்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், செய்முறைத்தேர்வுகளுக்கு வெளிக்கல்லூரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் இந்து கல்லூரி ஆசிரியர்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால் மாணவர்கள் பாதிக்காதவாறு அந்தந்த பாடவேளையில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திவிட்டு வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்துக்கு மூட்டா கிளை துணைத்தலைவர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராதாகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். இந்த போராட்டத்துக்கு கல்லூரி மாணவ– மாணவிகளும் ஆதரவு தெரிவித்து சென்றனர். இந்த போராட்டம் நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது.
இன்று 2–வது நாளாகவும் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவ– மாணவிகளும் பங்கேற்க உள்ளதாகவும் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ– மாணவிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Next Story