‘மார்பக புற்றுநோய் ஏற்பட்டால், தர்மச்சங்கடத்துக்கு ஆளாகாதீர்கள்’ பெண்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள்
‘‘மார்பக புற்றுநோய் ஏற்பட்டால், பெண்கள் தர்மச்சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம்’’ என்று நடிகர் அமிதாப்பசன் தெரிவித்துள்ளார்.
மும்பை,
‘‘மார்பக புற்றுநோய் ஏற்பட்டால், பெண்கள் தர்மச்சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம்’’ என்று நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
அமிதாப்பச்சன்பெண்களை சமீப நாட்களாக மிகவும் அச்சுறுத்தி வரும் வியாதி, மார்பக புற்றுநோய். இதனால், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செல்போன் செயலி ஒன்றை மும்பையில் தனியார் நிறுவனம் வடிவமைத்தது.
இதனை 74 வயது நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:–
சமுதாயத்தில் மார்பக புற்றுநோய் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த நோய் ஏற்பட்டால், பெண்கள் தர்மச்சங்கடத்துக்கு ஆளாக கூடாது. பிற வியாதிகளை போல், இதற்கும் சிகிச்சை பெறலாம். நோய் வந்தால் யாரும் சங்கடப்படவோ அல்லது உணர்ச்சிவயப்படவோ கூடாது. நாம் அனைவரும் மனிதர்கள் தான். எல்லா வகையான வியாதிகளும் நம்மை எளிதில் தாக்க கூடியவை.
தவறான கருத்துகள்பல்வேறு சுகாதார திட்டங்களுக்கு நான் தூதராக செயல்பட்டு வருகிறேன். நோய்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் குறைவான அறிவே இருக்கிறது. நோய்களை பற்றிய தவறான கருத்துகளுடன் அவர்கள் வாழ்கிறார்கள். இன்று (அதாவது நேற்று) தொடங்கப்பட்டுள்ள இந்த செயலி, மார்பக புற்றுநோய் குறித்து சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்.
நோய் பற்றிய அறிவை பெறுவது பெரிய வேலை. வியாதிகளால் பாதிக்கப்படும் நபர்கள், சமயங்களில் டாக்டர்களின் ஆலோசனை வேண்டாம் என்று கருதுகின்றனர். அப்படியே டாக்டரை ஆலோசிப்பது என்றாலும், மிகவும் காலதாமதமாகவே செல்கின்றனர். சரியான தருணத்தில் ஆலோசனை பெறுவது நல்ல பயன் அளிக்கும்.
இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்தார்.