நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குசாவடி மையங்கள் மாற்றம் கலெக்டர் கருணாகரன் தகவல்


நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குசாவடி மையங்கள் மாற்றம் கலெக்டர் கருணாகரன் தகவல்
x
தினத்தந்தி 18 March 2017 1:30 AM IST (Updated: 18 March 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குசாவடியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குசாவடியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வாக்குச்சாவடிகளில் மாற்றம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுரையின் படி ஏற்கனவே கிராமப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 19 பஞ்சாயத்து ஒன்றியங்களில் 2 ஆயிரத்து 342 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த ஜனவரி மாதம் 5–ந் தேதி வெளியிடப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் படியும், பொது மக்களின் கோரிக்கையின் படியும் ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

புதிய வாக்குச்சாவடி

மானூர் பஞ்சாயத்து யூனியன் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து வார்டு எண் 4–க்கு, செட்டிக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் புதிதாக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மானூர், நாங்குநேரி, குருவிகுளம், வள்ளியூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய பஞ்சாயத்து ஒன்றியங்களில் 28 வாக்குச்சாவடி மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. 13 பஞ்சாயத்து ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை.

வருகிற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடி இறுதி பட்டியல் வருகிற 21–ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும்.

இவ்வாறு அதில், கலெக்டர் கருணாகரன் கூறியுள்ளார்.


Next Story