பண பலத்துடன் மோதும் சக்தி எங்களுக்கு இல்லை இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) போட்டியிடவில்லை தேவேகவுடா பேட்டி


பண பலத்துடன் மோதும் சக்தி எங்களுக்கு இல்லை இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) போட்டியிடவில்லை தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 18 March 2017 1:50 AM IST (Updated: 18 March 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

பண பலத்துடன் மோதும் சக்தி எங்களுக்கு இல்லை. இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தேவேகவுடா கூறினார்.

மைசூரு,

பண பலத்துடன் மோதும் சக்தி எங்களுக்கு இல்லை. இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தேவேகவுடா கூறினார்.

பண பலத்துடன் மோதும் சக்தி...

மைசூருவில் முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இடைத்தேர்தலில் பண பலத்தை கொண்டு வெற்றி பெற முடிவு செய்துள்ளனர். அந்த பண பலத்துடன் மோதும் சக்தி எங்களிடம் இல்லை. இதனால் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடவில்லை. நாங்கள் அடுத்த ஆண்டு (2018) நடக்கும் பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

பா.ஜனதாவுக்கு ஆதரவா?

இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. எக்காரணம் கொண்டும் பா.ஜனதாவுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கமாட்டோம். இடைத்தேர்தல் மட்டுமல்ல பொதுத்தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

இதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள், அடுத்து நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது. உத்தரபிரதேச தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது. அங்கு முறைகேடு நடக்கவில்லை என பொய் கூறக்கூடாது. பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதை இந்த அரசு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story