திருவள்ளூர் அருகே கார் மோதி பெண் சாவு
திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாரதா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஜமீன்கொரட்டூரை சேர்ந்தவர் திருவேதி. இவரது மனைவி சாரதா (வயது 65). இவர் அந்த பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 15–ந் தேதியன்று சாரதா வியாபாரம் செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சாரதாவை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாரதா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story