கொளத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கொளத்தூரிர் ஸ்ரீகணபதி நகர், 2–வது தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டில் நகை, பணம் திருட்டு.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூர் ஸ்ரீகணபதி நகர், 2–வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 52). ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் இரவு தரை தளத்தில் உள்ள கதவை உள்தாழ்ப்பாள் போட்டு விட்டு சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் முதல் தளத்தில் சென்று தூங்கினர். நள்ளிரவில் தரை தளத்தில் உள்ள கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை திருடினர்.
மேலும் வீட்டின் உள்ளே சுவரில் மாட்டி இருந்த மோட்டார் சைக்கிள் சாவியை திருடிய மர்மநபர்கள், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
நேற்று காலையில் எழுந்து பார்த்த சுரேஷ், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம், எல்.இ.டி. டிவி. மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story