கோடைகாலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி–சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்
கோடைகாலங்களில் ரெயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி–சென்னை எழும்பூர் இடையே சிறப்பு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம்
திருச்சி,
கோடைகாலங்களில் ரெயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி–சென்னை எழும்பூர் இடையே சிறப்பு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 3.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு இரவு 9.10 மணிக்கு சென்றடையும். இதேபோல சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 3–ந்தேதியிலும் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 3.10 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது. மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது