மணல் கடத்தல்; 4 பேர் கைது
மணல் கடத்தியதாக பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த பாபு, திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கருக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அந்த பகுதியில் போலீசாருடன் ஆய்வு செய்தார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தெரியவந்தது. மணல் கடத்தியதாக பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த பாபு (வயது 15), திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த சுரேஷ் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாபுவிடம் இருந்து மாட்டு வண்டியை போலீசார் கைப்பற்றினர். அதேபோல் முசரவாக்கம் பகுதியில் மணல் கடத்தியதாக பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வடிவன் மற்றும் போலீசார் தாமல் பகுதியை சேர்ந்த பிரபு (31) என்பவரை கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வெள்ளவேடு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் புதுச்சத்திரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு டிராக்டரை கைப்பற்றி அதை ஓட்டி வந்த பெருமாள்பட்டை சேர்ந்த கார்த்திக் (32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story