சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்குதண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் மனு


சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்குதண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 18 March 2017 4:15 AM IST (Updated: 18 March 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்குதண்ணீர் திறக்க கோரி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

சூரம்பட்டி அணைக்கட்டு

ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் முத்துக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வந்து செயற்பொறியாளர் ராஜூவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு மற்றும் நஞ்சை ஊத்துக்குளி கால்வாய், கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு தன்னார்வ அமைப்புகளால் தூர்வாரப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் பெய்த மழையால் சூரம்பட்டி அணைக்கட்டில் 7 அடி வரை தண்ணீர் தேங்கி உள்ளது.

திறக்க வேண்டும்

இந்த தண்ணீரை நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் திறந்து விட்டால், காசிபாளையம், 46–புதூர், லக்காபுரம், முத்துக்கவுண்டன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் மூலம் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை தீர்வதோடு, விவசாய பயிர்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும்.

எனவே அணைக்கட்டில் உள்ள நீர் வழிந்து ஓடையில் செல்வதை தடுத்து, நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் விவசாயிகள் கூறி இருந்தார்கள்.


Next Story